மேசைக்கு மேலேயே வாங்கு பவர் - நேரிசை வெண்பாக்கள் 27

அரசுப் பணியினில் உள்ளோர் பலரும்
தரணியில் சற்றுமச்ச மின்றி – விரும்பியே
மேசைக்கு மேலேயே வாங்கு பவர்தாமே
வேசைக்கு எப்பொழுதும் நேர்! 1

திரிந்திடும் தீவிர வாதம் அழித்து
எரித்திடும் தீமை விடுத்து - மரித்த
மனிதமும் நீக்கி மறைந்திட்ட நேயம்
புனிதமாய் ஓங்க இயம்பு! 2 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-14, 10:09 pm)
பார்வை : 75

மேலே