என்னவளைக் காண்பேன் கனிந்து - நேரிசை வெண்பாக்கள் 28

உணர்வுகள் பூக்குமே வாசமலர்த் தோட்டம்!
உணர்வுகள் பேசா இதழ்களில் – வண்ணக்
கனவை விரிக்குமே! காதல் நிலவாய்
நினைவில் எழும்உன் நினைவு! 1

ஓரவிழிப் பார்வையிலே ஓவியமாய் நீயிருக்க
வீரமுடன் நானங்கே காத்திருக்க – தோரணமாய்
கன்னியவள் அன்னநடை காட்டிவர நான்மட்டும்
என்னவளைக் காண்பேன் கனிந்து! 2

உயிரின் உணர்வான காதற் கிளியே!
வெயில்காலக் காற்றினில் வேனில்! – உயிர்க்குப்
பசுமையாய் என்வாழ்வில் வந்த பைந்தேன்!
விசும்பில் உலவும் நிலவு! 3

ஓரவிழிப் பார்வையிலே ஓவியமாய் நீயிருக்க
வீரமுடன் நானங்கே காத்திருக்க – தோரணமாய்
கன்னியவள் அன்னநடை காட்டிவர தேனினிய
என்னவளை நான்மறப்பே னோ! 4

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-May-14, 8:45 am)
பார்வை : 81

மேலே