கருத்தில் விரிந்த மலர்கள் - கவின் சாரலன் அய்யாவுக்கு
193153 என்ற எண்ணில் திரு. கவின் சாரலன் அய்யா எழுதிய கவிதைக்கு சமர்ப்பணம்.
அவரது கவிதை என்னுள் தூண்டிய உந்துதல்
காணிநிலம் வேண்டாம் பராசக்தி
==கணினி யொன்று போதுமம்மா
தேனிருக்கும் பூப்போல் கற்பனை
==தொட்டவுடன் விரியுதம்மா
தோணி மிதக்கும் காவிரிபோல்
==கவியோட்டம் பெருகுதம்மா !
மானினை யொத்த செல்லம்மாவும்
==கடையத்திற்கு சென்று விட்டால்
நானிதை வைத்து அவளுக்கும்
==காதல் மின்மடல் அனுப்பிடுவேன் !
நாணித் தலை குனிந்துகொண்டு
==வெள்ளையன் ஓடிய இன்பத்தினை
ஏணிஏறி எழுத்தென்னும் தளத்திலே
==ஆயிரம் பாடல் பதித்திடுவேன்
தூணிணைப் போல்தான் எழுத்தேனக்கு
==தூயதாயே கணினியொன்று தந்துவிடு !
விவேக்பாரதி