கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
பெண்குலத்தின் பேரின்பத் தீயே ! உனையிங்கு
கண்டநாள் தன்னில் இருந்துநான் - மண்விட்டு
விண்ணுக்குள் பாய்ந்தேன் நீகொஞ்சம் நாணத்தைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து !
மண்மீது இங்குண்டு ஆயிரம் இன்னல்கள்
எண்ணில் அடங்காத துன்பங்கள் - பெண்ணணங்கே
வண்முறை எண்ணங்கள் யாவையும் சேர்த்திங்கு
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து
விவேக்பாரதி