அம்மா அம்மம்மா !

முதுகில் ஒரு கர்ப்ப பை
முடியவில்லை பிரசவம்

பத்து மாதம் வயிற்றில் இருந்தும்
பத்தாத கர்ப்ப காலம்

பசியெடுக்கும் வயிற்றிலிருந்து
பாசம் பிறக்கும் முதுகிற்கு

பிரசவித்த வேதனையில்
பிரசவிக்கும் சாதனை

தாய் பாசத்திற்கு நிகரேது
தலை வணங்குகிறேன் தமிழனாய்!


எழுதியவர் : . ' .கவி (3-Mar-11, 1:31 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 847

மேலே