கள்ளக்காதலி

உருவத்தை காதலித்து
உள்ளத்தையும் காதலித்து
என்னை உன்னவளாய் ஏற்று
மணமேடையில் ஏற்றினாய் !
கருவறையில் உன் அணுவையும் ஏற்றினாய் !
கனியாமுதாய் இரு செல்வங்களை இறக்கினேன்!
ஒருவர் இருவரானோம் !
இருவர் நால்வரோனோம்!
நான்கு சுவர்களில்
நலமாய் வாழ்க்கை!!=====...
காற்று பலமாய் வீசியதால்
சூரைகாற்றாய் மாறி
காற்று அழுத்த மண்டலத்தை உருவாக்கி
கள்ளக்காதலி
என்ற புயல் சின்னத்தை
உருவாக்கியது =====
ரசித்த உடல்
சலித்தது!
சலித்த மனம்
பேதலித்தது !
பேதலித்த மனம்
காதலித்தது
கள்ளத்தனமாய்
கயல் விழியை !!!
நியாயங்கள் கேட்டேன்
குற்றவாளியாக்கப்பட்டேன் ===
குற்றவாளியான நீயோ
நிரபராதியனாய்======
வலியால்
என் இதயம்
துடித்தது !!
என் இதய துடிப்பை பார்த்து
உன் இதயம் சிரித்தது !
என்னிடத்தில்
மற்றொரு பெண்ணா ?
கயல் விழியை
விழியில் வைத்தாய் !
விழி பார்வை அற்று போகும்
என்பதை மறந்தாய் !
அப்பா எங்கே ?
என்ற கேள்விக்கு
விடை தெரியாமல்
வெந்து புண்ணானேன் !
வெந்த புண்ணிற்கு
உன் மருந்து
வேல் பாய்ச்சிய
ஏக்காளங்கள்!!!
உன் கள்ளக் காதலியின்
உடல் அழகு
ஒரு ஹைக்கூ கவிதை !!!!
நான்கு வரிகளில்
நச்சென்று சந்தோஷம் கொடுக்கும் !
ஆனால்
மனைவி என்பவள்
மனதில் நிற்கும்
பரிசு பெற்ற கவிதை
என்றும் நிரல் பலகையில் ==========
நிதர்சனமான உண்மையை
நெஞ்சில் நிறுத்தி
நிதானமாய்
நிமிர்ந்த நடையுடன்
வெளியில் வா !!!!!!!!!!!