காதல் மனு

என்னவளே என் இனியவளே – மனம்
செந்தாமரை போல் கொண்டவளே – தினம்
காணத்துடிக்குது என் கண்கள் – இனம்
புரியாமல் பெரும் திண்டாட்டம் – உனை
உனை கண்டால் அந்த தினம் கொண்டாட்டம்...
ஓர விழியில் பாக்குறியே – திரை
போட்டு மனதை மறைக்குறியே – குறை
ஏது சொல்லு என்னிடத்தில் – முறை
செய்யுவேண்டி உன்னிடத்தில் – கறை
ஏதுமில்லை என் மனதில் – சிறை
பிடிக்குதடி எனை உன் கண்கள்...
வெள்ளி கொலுசு அணிந்தவளே – என்
சத்தத்தை திருடி சென்றவளே – என்னை
மௌனச் சிறையில் அடைத்தாயே – எந்தன்
மகிழ்ச்சி சிறகினை உடைத்தாயே – என்னை
கண்ணீரில் குளிக்க விட்டாயே – பெண்ணே
பரிவு கொண்டு என்னைப் பாரு – உன்
காதலை என்னிடம் கூறு..!!

எழுதியவர் : vijaymanza (5-May-14, 10:16 pm)
சேர்த்தது : vijaymanza
Tanglish : kaadhal manu
பார்வை : 91

மேலே