பேரன் குறள்கள் -03 =

யோரன் குறள்படித்து யோசித்தது:..
=============குறள் யாப்பு ===========
கற்று, வளர்,அறிவை; கல்லார்க் கதனையே
விற்றுப் பிழைத்தல் விடு!-----------------------------------21

பேரர் உலகத்தில் பேரா இடம்பெற
ஓரார் உலகத் திலர்!--------------------------------------------22

தாவரங்கள் போல்வாழ்! தரைமேல் நிமிர்ந்து,நில்!
‘கா’வரங்கள் கூட்டிக் களி!----------------------------------23

பூவரங்கள் போல்ச்சிரி! பொய்யாத வாழ்க்கையை
நீ,உலரும் முன்னே நிறுத்து!-------------------------------24

மண்பாவை வைத்து மனம்போல் விளையாடு
மண்பாளம் ஆக்க மறு!---------------------------------------25

நிலவிலே கால்வைத்தென்?; நீலவுல கின்கண்
பலவுயிர்கள் வாழப் படி!-------------------------------------26

எதுகை,மோ னைகொண் டிணக்கமதைக் கற்றுப்
பதமாய் நடந்து பழகு!-----------------------------------------27

வரலாற்றை நீக்கின் வளர்ச்சிபுரி யாதே!
மரபாற்றல் கண்டு மதி!---------------------------------------28

காதலும் வீரமும் காசுக் கிருபக்கம்;
மோதலைப் போக்கவே அன்பு!----------------------------29

குட்டிக் குடிமகனைக் கொஞ்சி மகிழ்வோர்க்குப்
புட்டி மதுப்பழக்கம் போம்!-----------------------------------30
======= ========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (6-May-14, 6:45 am)
பார்வை : 80

மேலே