பேரன் குறள்கள் -04=

யோரன் குறள்படித்து யோசித்தது ==குறள் யாப்பு===

கண்ணால் சிரித்தும், கரங்கொண் டசைத்தும்,உன்
பண்ணார் மழலையில் பாடு!----------------------------31

அண்ணாந்து பார்ப்பாய்; அசைத்துக்கை தூக்கெனும்;
விண்ணேந்த மேக அழைப்பு!----------------------------32

உதைக்கின்ற கால்கள், உதறுமக் கைகள்,
கொதிக்கின்ற தோ,அன்பு? கூறு!------------------------33

புரண்டு படுத்து,தலை பொய்ப்பாம்பாய் ஆடும்
மிரண்டு,நான் போவேன் மிக!----------------------------34

உருண்ட விழிதூக்கி உற்று,நீ பார்த்து
மிரண்டநாள் தோன்றுமோ மீண்டு!--------------------35

கைகால் அசைத்து,எடுக்கக் காட்டும்,உன் ஆணையிலே
மெய்தான் புதிதாம் எனக்கு!-------------------------------36

தென்றல் எனத்தழுவி தேனருவி போல்,கழுவி
என்னை,மகிழ் விப்பான் இவன்!-------------------------37

கண்டால் எடு,என்பாய்; கையில் எடுத்தணைத்துக்
கொண்டால் உதைப்பாய் குதித்து!----------------------38

உதட்டை மடித்தும் உருட்டி விழித்தும்
அதட்டினால் வீரனா டா?-----------------------------------39

பின்னால் மலையேறப் பேரா! பயிற்சியோ?
என்மேல் உதைத்தேறி இன்று!---------------------------40
=========== =================

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (6-May-14, 7:47 am)
பார்வை : 81

மேலே