விதியின் விளையாட்டு28
திருமணம் முடிந்து தனது கணவர் வீட்டிற்கு சென்ற ஷிவானிக்கு அங்குள்ள அனுபவங்கள் புதிதாக இருந்தது பெற்றோர் தங்கை நினைவுகளுடன் இருந்தாலும் கணவன் குடும்பத்தினரையும் மிகவும் பிடித்து போனது அதனால் மகிழ்சியாக இருந்தாள்....!
7நாட்கள் கழிந்ததும் விருந்து அழைப்பு என்ற முறைக்காக அம்மா வீட்டிலிருந்து ஷிவானி வீட்டிற்கு அழைக்க சென்றனர் உடன் சந்துருவின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் சென்றனர்..........
தாய் வீட்டாரின் வரவில் மிகவும் மகிழ்ச்சியானாள் ஷிவானி!!!!
அனைவரும் ஷிவானி வீட்டிற்குள் வந்தனர் அனைவரும் சந்தோஷமாக இருக்க..?
ரிஷானி மட்டும் கவலையுடன் காணப்பட்டாள் அந்த கவலையின் ரகசியம் ஷிவானிக்கு புரிந்து போனது....!
ரிஷானியின் பக்கத்தில் வந்து அவளை அணைத்துக்கொண்ட ஷிவானி வருத்தப்படாத ஒரு மாதத்திற்குள் உன் திருமண விஷயத்தை அப்பாவிடம் நானும்,அத்தானும் சேர்ந்து பேசுகிறோம் அதுவரை பொறுமையாக இரு என்றாள்.
சரி!என்பது போல் புன்னகைத்தாள் ரிஷானி?????
உள்ளே சென்றவர்கள் சாப்பிட்டு முடித்து ஷிவானியின் தந்தை விட்டீற்கு வந்தவர்களும் புதுமணத்தம்பதியரும் கிளம்பினர்.......!
அப்பொழுது சந்துரு ரிஷானியை பார்ப்பதை ஷிவானியும் மனோஜும் கவனித்து விட்டு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்......
அவர்களின் சிரிப்பை புரிந்து கொண்ட ரிஷானி வெறுப்புடன் சந்துருவை முறைத்தாள்?????
வீட்டிற்கு வந்தது ஷிவானியுடம் ரிஷானியும் தனி அறைக்கு சென்று பேச ஆரம்பித்தனர்..........
முதலில் மனோஜ் குடும்பத்தை மிகவும் பிடித்ததாகவும் மிகவும் அன்பாக 3பேரும் நடந்து கொள்கிறார்கள் என்றும் கணவன் வீட்டின் நிறைகளை சொல்லி புகழ்ந்தாள் ஷிவானி.
பேசி முடித்தவள் ரிஷானியை திரும்பி பார்த்தாள் அவள் கண்கள் சோர்வுடன் இருப்பதை கவனித்து "என்னடி உனக்கு ஆச்சி என்ன விஷயம்"? என்று சொல்? என்று வினவினாள் ஷிவானி???????
அக்கா"மதன் இல்லைன்னா என் வாழ்க்கையே இல்லை அக்கா, அவன பிரிஞ்சி என்னால வாழ முடியாதுக்கா நீதான் உதவி செய்யணும்" என்று சின்ன குழந்தை மாதிரி அழுதாள் ரிஷானி.....!
ரிஷானியை தேற்றி அவள் தோளில் சாயவைத்த ஷிவானி இப்போ என்னடி அப்பாக்கிட்ட உடனே பேச முடியாது இல்ல சொந்தகாரங்க எல்லாம் போன பிறகு பேசிக்கலாம் நான் பேசுறேன் ஒரு பிரச்சனையும் வராது என்று ஆறுதல் படுத்தினாள்
ஷிவானி.
கண்டிப்பா புது பிரச்சனை வரப்போகுது அக்கா என்று கத்தினாள் ரிஷானி??
புரியாமல் அவளை நோக்கினாள் ஷிவானி!!...?
ஆமா அக்கா நீயே பார்த்தா இல்ல சந்துரு.......என்று இழுத்தாள்.....!
அத விடு சும்மா பார்த்துட்டு போகபோறான் இன்னும் கொஞ்ச நாள்ல இங்கிருந்து கிளம்பிருவான் லூசு இதெல்லாம் ஒரு விஷயமா?என்று கிண்டலடித்தாள் ஷிவானி......
உனக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாது என்று அழ ஆரம்பித்தாள் ரிஷானி...........
விதி தொடரும்......