மழைத் துளிகள்

பொலி காளையாய்
எக்காளமிட்டு கெக்கெலி கொட்டி
உறுமுகிறான் மேகக்காரன்...
இடி !

வானப் பெண்ணின் விழித் தீயாய்
விட்டு விட்டு எரியுது...
மின்னல் !

அந்த மின்னல் தீயில்
உருகி ஊத்துது அந்த மேகமெல்லாம்
மழையாய்!

ஆனந்தக் கண்ணீருடன்
மோகனமாய் சிரிக்கிறாள்
வானப் பெண்
வானவில் !

எழுதியவர் : நேத்ரா (7-May-14, 8:14 pm)
Tanglish : malaith thulikal
பார்வை : 145

மேலே