கல்லூரி காலம்

ஆசிரியர் ஒருவர் இறுதியாண்டு மாணவர்கள் பிரிவு உபச்சார விழாவில் எழுதியது போன்று

கல்லூரி காலம்
வாழ்க்கை டைரியின்
வசந்த காலம்

கல்வி பயில வந்த
உங்களிடம்
நல் அன்பை பருகியவன்
நான்

நல்லவர்களாய் மட்டுமா
நீங்கள்
நாளைய சமுதாயமே

பல கிளைகளில் இருந்து வந்தாலும்
ஒரே மரமாய்
நீங்கள்
அதில் எனக்கு இடம் தந்து இழப்பர
வைத்தவர்கள் நீங்கள்

மறதி மானிடரின் மறுக்க முடியாத
உண்மை
இருந்தும் மறந்து விடாதிர்கள்
நல்ல நண்பர்களை

திரும்பிய திசையெல்லாம்
தோல் கொடுப்பான்
தோழன்
மறந்து விடாதிர்கள்
நல்ல நண்பர்களை

பிரிவு என்பது
புரிதளுக்குதான்
புரிந்துகொள் -நீ

சாதி சாக்கடையை
சாட்டையால் அடி
ஊழலை ஒலிக்கும்
உத்தமனாய் இரு
தீமை பொசுக்கும்
தீயாய் இரு
தோழ்விகள் வரும்
திடமாய் இரு
உண்மை பேசு
உதிரம் கொடு
உள்ளதை கொடு
உள்ளதால் கொடு


முயற்சி செய்து
பயிற்சி எடு
முன்னேற்ற கதவு
முழுசாய் தெரியும்
அதுவரை
மோது - முன்னேற

எழுதியவர் : திருக்குமரன்.வே (9-May-14, 10:42 am)
Tanglish : kalluuri kaalam
பார்வை : 518

மேலே