உயிர் மூச்சும் அடங்கியிருக்கும்
மூடத்தனத்தினை
மூலதனமாகக் கொள்ளும்
நாத்திக மனம்
அறிவெனும் போலிப் பாவனையில்
அரங்கேறி ஆனந்தக் கூத்தாடும்
ஆடி அடங்கி அரங்கம்
அகன்றிடும் போது ஞானம் பிறந்திடும்
பால் பாலென நீர் நீரெனத் தெளிவாகும் .
அப்போது உயிர் மூச்சும் அடங்கியிருக்கும் !
-----கவின் சாரலன்