அறியாமை
'' அறியாமை //
'' மனிதனின் மூடத்தனத்தின் ,
முன்னேற்றம் -அறியாமை //
'' மனிதனின் வளர்ச்சியை ,
வற்றா நிலமாக்குவது -அறியாமை //
'' மனித அறிவை அறிவீனம் ,
ஆக்குவது -அறியாமை //
'' சிந்தனை அறியா மனிதனுக்கு ,
சவுக்கடிதான் இந்த -அறியாமை //
'' காணும் நீர் கானல் நீர் ,
தாகம் தீர்க்கும் என்பது -அறியாமை //
'' அவசரத்தில் அறிவை ,
இழப்பதும் இந்த -அறியாமை //
'' முட்டாளின் மூலதனம் தான் ,
இந்த -அறியாமை //
'' அறிவாலனும் சிலசமையம் ,
அகப்படுவது இந்த -அறியாமை // - மொத்தத்தில் ,
'' அறியாமை மனிதனுக்கு ,
வரும் ஒரு பெரிய அம்மை .....//
அறிந்ததும் ,அறியாததும் , - சிவகவி ,,,