பிஞ்சுக் கால்கள்

பிஞ்சுக் கால்கள்
என் மார்பில்
இடித்த போது
நெஞ்சுக்குள்
ஆனந்தம்
அளவின்றி
தவழ்ந்தது......

உன் விழி
நீரையும்
ரசித்தேன்.....
உன் எச்சியையும்
ருசித்தேன்....
பிள்ளைச் செல்வம்
பெற்ற
மகிழ்ச்சியில்
எட்டுத் திக்கும்
சிறகு
விரிக்குதே
என் மனம்.......!

செல்லச்
சிணுங்கலையும்
சின்னச்
சிரிப்பையும்
சொல்லச்
சொல்ல
சொர்க்கத்தில்
என் எண்ணங்கள்.....!

எழுதியவர் : thampu (11-May-14, 4:07 am)
Tanglish : pinjuk kaalgal
பார்வை : 85

மேலே