அன்னையர் தினம் - 11052014
அன்னையின்றி பிறப்பில்லை எவருக்கும்
அவரின்றி தெய்வமில்லை அகிலத்திற்கும் !
அன்போடு பாசமுடன் வளர்ப்பவள் அன்னை
அயராது தளராது நமை ஆளாக்கும் அன்னை !
விழிகளுக்கு இமைபோல் நமை காத்திடுவாள்
விழுதுகள் நமக்கு வாழ்வின் ஆணிவேரவள் !
நம்பசி போக்கிட அவள்பசியை துறந்திடுவாள்
நம்நலன் காத்திடவே நாளும் உழைத்திடுவாள் !
தனைவருத்தி நமைஉயர்த்தி அழகு பார்ப்பவள்
தன்னலம் இல்லாத நிகரில்லா இமயம் அவள் !
பாரமாக நினைததிட்டு ஓரமாய் ஒதுக்கினாலும்
பாசம் குறையாது வாழ்த்திடும் இதயம் அன்னை!
அன்னையின் அரவணைப்பு தென்றலின் சுகம்
அன்னையின் அன்பே ஆஸ்கார் விருது நமக்கு !
அன்னையை தொழுது நாளை தொடங்கிடுங்கள்
அன்னையின் மடியே இன்பத்தின் இமயம் நமக்கு !
வயோதிகர் ஆனதால் வளர்த்திட்ட அன்னையை
முதியோர் இல்லம்தேடி முன்னின்று அனுப்புவர் !
தள்ளியே வைத்தாலும் தானாகவே சென்றாலும்
தாயுள்ளம் மாறாது வாழ்த்திடுமே பிள்ளைகளை !
தாரம் வந்தவுடன் தாயை மறந்திடுவர் சேய்கள்
ஈடேது இணையேது இவ்வுலகில் அன்னைக்கு !
கலங்காமல் காத்திடுங்கள் நிலையாய் தாயை
வணங்கிடுங்கள் அன்னையை நாம் வாழும்வரை !
பழனி குமார்