அன்னை நம் அன்னை

அன்னை நம் அன்னை

ஈரைந்து திங்கள் கருவினை சுமந்தவள்
ஊனினை தன்னில் சுகமென உணர்ந்து
ஈன்றெடுத்து நம்மை உலகினில் தந்து
உதிரத்தை தந்தாள் பாலாக சுரந்து ...

பேதமில்லா மனம்கொண்டு தன் பிள்ளைகளுக்கு
மகிழ்ச்சினை தந்து துன்பங்களை தான்சுமந்து
தாயாய் அவள் மிளிர்ந்திடுவாள் தரணியெங்கும்
அன்னையருக்கு அன்னையாய் அவள் விளங்கிடவே..

அன்னை என்பவள் அன்பாக நடந்திடுவாள்
தாயாயவள் நமக்கு நடமாடும் தெய்வமன்றோ
தாங்கி பிடித்திடுவாள் தன் சேயியினை
தான்வருந்தி மக்கள் நலமொன்றே பேணிடுவாள் ..

மற்றுமொரு பிறவி கிடைக்குமோ நமக்கு
அன்னையாய் அவள் நம்மை சுமந்திட
எப்பிறவியில் செய்தப் பயனின் புண்ணியமோ
இப்பிறவியில் அடைந்திட்டோம் அன்னையாய் அவளை ... ... ...

அன்னையருக்கு நிகருண்டோ அவனிதனில் என்றும் ...

(உலக அரங்கினில் உலா வரும்
அனைத்து அன்னையருக்கும்
"அன்னையர் தின வாழ்த்துக்கள்")

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (11-May-14, 10:04 am)
Tanglish : annai nam annai
பார்வை : 3611

மேலே