கம்ப நதி காமாட்சி திருவந்தாதி தொடர்ச்சி -6
12.
மலரின் மணமும்,மனதின் குணமும்
அறிந்த திருப்பாள் ல்
கலங்கும் மனதின் கவலை
துடைத்து துணையிருப்பாள் !
துலங்கும் வெளிச்சம் , துடைக்கும்
இருளைத் தொலைத்துவைத்து,
விலங்கின் மனதை விரட்டி ,
விடுக்விசா லாட்சிதாயே !
13.
தாயே! தருவாய்! அருளும்,
தளிர்க்கும் உறவினையும் ,
நீயே! துணையாவாய் ! துடைப்பாய்
துயரின் வழிமறித்து ,
வாயேன், அடிமையின் வாசல்
திறந்து வழிஉனர்த்தி,
சேயாம் எனக்குச செலுத்தும்
கருணைக் கதிரொளியே !
14.
கதிரொளி பாய்ச்சும் வெளிச்சம்
கருணை செயுமொருநல்,
மதியென வார்க்கும் வடிவாம்!
மலரென பூக்குமிங்கு ,
நதியென தாகம் குறைத்து
நலமதை நல்கி இங்கு,
துதிக்கின்ற மாந்தர் துணையாய்
தொடரும் வழித்துணையே!