சின்ன திரையால் நன்மையா தீமையா

தீமைகள் :
---------------------------------------------------------------------------
ஷாக் அடிக்கும் மின்சார செலவு !

அருமையான நேரத்தை அற்புதமாய் வீணடிக்கும் நேர கொல்லி!

தேர்வு நேரங்களில் வில்லன் கதாபாத்திரம்!

மாணவர்களை t - 20 கிரிக்கெட் பார்க்க வைத்து தேர்வில் ரன் அவுட் ஆக்கும் சாதனம்!

லாலி -பாப் பாப்பா முதல் ஜோலி இல்லாத தாத்தா பாட்டி வரை அனைவரையும் அடிமையாகி வைத்திருக்கும் போதை பொருள்!

பெண்களை அழ வைக்கும் கிளிசரின் பாட்டில் !
------------------------------------------------------------------------
நன்மைகள் :

எங்கோ இருக்கும் முக்கிய நபர்களை நிகழ்வுகளை அருகாமையில் பார்க்கும் வாய்ப்பு !

பரபரப்பான பரவசமூட்டும் நேரடி ஒலிபரப்பு !

அம்சமான கலை விளையாட்டு நிகழ்சிகள் !

ஆழ்ந்த அறிவாற்றலை அற்புதமாக அலசும் வினாடி வினா நிகழ்ச்சி !

பந்து போல் பறந்து வரும் மின்னல் செய்திகள் !

காசு செலவில்லாத நூதன பொழுது போக்கு கருவி !
---------------------------------------------------------------------------
தீர்ப்பு :

சின்னத்திரை ஒரு சுமை தான் என எல்லோரும் நினைத்தாலும் இது ஒரு சுகமான சுமை தான் !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (13-May-14, 12:31 am)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 111

மேலே