+கோடைகாலமே அடியே கோடைகாலமே+

கோடை காலமே அடியே கோடை காலமே
ஏண்டி என்னை நீ
சும்மா வாட்டி வதைக்குற
சுடும் பூமி அடுப்பினில்
எனை போட்டு புறட்டுற
என்ன பாவம் செஞ்சேனோ
முழுசா வெளுத்து வாங்குற
என்ன வரமும் பெற்றேனோ
எனைநீ படுத்தி எடுக்குற
கோடை காலமே அடியே கோடை காலமே
மழையும் குளிரையும் எங்கே
ஒழிச்சு வச்சாயோ
நிழலைத் தேடுற எங்கள
ஒழிக்க வந்தாயோ
மாலை காத்தையும் எங்கோ
விலைக்கு வித்தாயோ
வேர்த்து வழியிற எங்கள
ரசிக்க வந்தாயோ
உச்சி வெயிலும் என்ன
உறவுக் காரனோ
பலவண்ண குடைகளும் உந்தன்
எதிரிகள் தானோ
சூடான காத்தும் உனக்கு
பிடித்த மாமனோ
வயக்காட்டு நாத்தும் உன்னால்
கருகிப் போனதடி..
கோடை காலமே அடியே கோடை காலமே
குறைச்சுக் கோயேண்டி உந்தன்
சீற்றத்தை கொஞ்சம்
பொழச்சுப் போறோண்டி சொகுசா
வாழ விடேண்டி
அடுத்த கோடைக்கு உனக்கு
படையல் தரேண்டி
இந்த கோடையில் இனியேனும்
மழைய தாயேண்டி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-May-14, 6:01 am)
பார்வை : 107

மேலே