+மனசிருந்தா உதவுங்க கிடைக்கும் பல உறவுங்க+
சோகப்பட்டு
விலக்கப்பட்டு
ஒதுக்கப்பட்டு
நிற்கும்பேர்க்கு
விருப்பப்பட்டு
உதவிசெய்தால்
தவறேஇல்லை
உணர்வோம்இன்றே!
-*-*-*-*-*-*-*-*-*-*
ஒடுக்கப்பட்டு
அடக்கப்பட்டு
வீழ்த்தப்பட்டு
நிற்கும்பேர்க்கு
தானதர்மம்
தேவையில்லை
மனசுதந்தால்
அதுவும்நன்றே!
-*-*-*-*-*-*-*-*
நஷ்டப்பட்டு
கஷ்டப்பட்டு
நாதியின்றி
நிற்கும்பேர்க்கு
இஷ்டப்பட்டு
இன்னல்போக்க
அண்ணல்இல்லை
அறிந்தே பகிர்வோம்!