காதல் கசக்குதய்யா - நாகூர் கவி
விழியால
வலை போடுவா...
நீ விழுந்துப்புட்டா
அதுல அலையாடுவா... !
விரலால
சைகை செய்வா...
நீ மாட்டிக்கிட்டா
உன் கைரேகை தேய
தினம் கவித எழுதுவா... !
பூ இதழ்களால
மெல்ல சிரிப்பா...
நீ கவிழ்ந்துப்புட்டா
காதல் பள்ளத்துல கெடப்பா... !
சின்ன சின்ன சிரிப்பை
சில்லறையா தருவா...
உன் வாழ்க்கையை
செல்லாத காசாக்க...!
அவள பின்தொடர்ந்தே
நடக்க வைப்பா...
நாளை உன்னை
தனியாக புலம்ப வைக்க... !
நிச்சயமா
உன்னத்தான் விரும்புவா...
நிச்சயத்தை மட்டும்
வேறொருவனுடன்தான் விரும்புவா... !
அம்மா அப்பா
மிரட்டுனாங்க...
அதனால அவளும்
மாறிபுட்டேன் என்பா...!
ஐயோ என் காதலு
தோத்துப்போச்சு...
நீயும் கிழிஞ்ச கீற்றுப்போல
மறுகணமே ஒடிவா... !
தாடி வச்சி
தெருவீதியிலே அலைவா ...
காதல் போதையத்தான்
மறக்கநீயும் இனி
பாருபக்கம் செல்வா... !
மாது போதையோடு
மது போதைகூடவே
வாழ்க்கை தாறுமாறாய் போகுமே...
இனி உன்னைப் பார்க்க
நாதி இல்லையென்று ஆகுமே...!
இந்த நிலை வேணுமா....?
பொம்பள மேல
காதல் இனி தோணுமா... ?
பதினாறு வந்துப்புட்டா
காதல் தகராறு செய்யுமடா...
அதனை நீயும் தடுத்துப்புட்டா
உன் ஆயுள் சத்தியமா நீளுமடா...!