சனியோ சளியோச லதோசமே - நேரிசை ஆசிரியப்பா

(நேரிசை ஆசிரியப்பா)

நேற்றுப் பெய்த திடீர்மழைதான் ஏனோ
காற்றும் மழையும் சேர்ந்தே வந்தது;
தெருவில் நடந்த என்னை அதனில்
ஒருமுறை நனைத்து உடலோடு நடுக்கம்
தந்தது; சிலமணி நேரத்தில் மூக்கில்
எப்பொழுதும் நீரொழுக எப்படியோ மூக்குச்
சிந்தி சிந்தி எனக்குப்
பிடித்தது சனியோ சளியோச லதோசமே! 1

நேற்றுப் பெய்த திடீர்மழைதான் ஏனோ
காற்றும் மழையும் சேர்ந்தே வந்தது
தெருவில் நடந்த என்னை அதனில்
ஒருமுறை நனைத்து உடலோடு நடுக்கம்
தந்தது; சிலமணி நேரத்தில் மூக்கைச்
சிந்தி சிந்தி எனக்குப் பிடித்தது
சனியோ சளியோ நானும்
சொல்வேன் ஒவ்வாமை சலதோசம் தானே! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-14, 7:56 am)
பார்வை : 94

மேலே