காதல் மடியாது- மலரும் -தனராஜ்

கண்களிலே
இருதுருவ காந்த சக்தியோ
இருமனமும்
இணைந்த போது
இருந்த ஒரு அதிசயமோ .

தென்றலுக்குத் தான் தெரியும்
தான் தீண்டியது ,
தென்றலின் சுகமும்
அது தீண்டத்தான் தெரியும் !
அவளுக்கும் எனக்கும்
மட்டுமே தெரியும்
அதுதான் எங்கள் காதல் என்று !

கூடவில்லை
ஊடவில்லை,குலவவில்லை;
காதல் வயப்பட்டு
களிப்பின் எல்லை கண்டோம் !

மனதால்
பிரிந்தொருநாள்
இருந்ததில்லை;
பிரிவு வருமென நினைவுமில்லை .

பிரிந்தபோது -
பிரியுடைந்த கயிறாக
வலுவிழந்து
வாழ்விழந்து
வானமே வந்து
பூமிக்குள் எங்களைப் புதைத்து விட்டது.

காதலிலே கருத்தரிக்க
கற்றுக் கொண்டோம் .
பூமியிலே விதையாக
பூத்தெழுந்தோம்!
புது காதல் மரமாக
தனித்தனியே
பூதொடுத்தோம் !

மீண்டும் காதலுக்கு உயிர் கொடுத்தோம்
காதல் சாகாத
வரம் எடுத்தோம் !

வாழ்வு ஒருபோதும்
வறலாது
வற்றாத மனம்
ஊற்றெடுத்து
உன்னிட மிருந்தால் !

காதல் தோற்க வில்லை
காதல் அனுபவம்
கண்ட தொல்வியது !

மனதை மடிய விடாது
மறுபடியும்
மணக்க விடு ,

காதலிக்க காலமில்லை
காலமெல்லாம்
காதல் சாவதில்லை !

காதல் சாவதில்லை !!

எழுதியவர் : தனராஜ் (14-May-14, 9:59 pm)
பார்வை : 108

மேலே