சிறப்புக் கவிதை 33 விமர்சனம் ஒரு கிழவி தோண்டும் அரசாங்கம் - வெள்ளூர் ராஜா

ஏலே ராசா... இங்க வாடே .. என்னமோ இணையதளத்துல எழுத்துன்னு பாட்டுக்கு ஒரு தளமிருக்காமில்ல.. அதுல போயி பாரு. ஏதோ என்னப் பத்தி எழுதிக்கெடக்காம். வெள்ளூரு ராசான்னு ஒரு தம்பி எழுதி வெச்சிருக்காம்..புள்ள எங்க நாம்படுற பாட்ட எங்க பாத்திச்சின்னு தெரியல..

வயசாயி ஓய்ஞ்சி மூலையில உக்காந்தா வெங்காயம் உரிக்காததுக்கு வெடுக்குனு பேசிப்புட்டா மயனக் கட்டிகிட்ட வெறும்பய மவ... சோத்துக்கு பழகுன பெத்த புள்ளையும் பேசாம தலையாட்டுது அவ பேச்சுக்கு.. வெசனப்பட்டு வீடு விட்டேன்.

முடியாத காலத்துல அலாவூதீன் பூதமா வந்து தரும் சோறு..? அரிசி பொடைக்க வேல கேட்டேன். மில்லு இருக்குங்குறான் பயபுள்ள...! வயிறு கேக்கல.

வாங்குன சாமானெல்லாம் வீசிஎறிஞ்சி பெருத்த மலையில சாமான அள்ளிவந்து சாப்பாடுக்கு வழிதேடப் போனா..!! அடி ஆத்தீ.. அள்ள அள்ளக் கொறையாம என்னன்னாமோல்ல வருது....!! எங்க காலத்துல குப்பையள்ளப் போனா உரம் வருமின்னு சொல்லுவாங்க அவுங்க.. இப்ப உசிருல்ல வருது.

கழிச்சி வீசினது பொறுக்கையிலே கை எரியுது ராசா.. வீசுனதுக்கே இவ்வளவு வெசமிருந்தா வாழ்ந்துகிட்டு இருக்கதுக்கு... எம் ஒருநா வாழ்க்கையிலே ஒட்டுமொத்த நாட்டோட நெலமையே சொல்லிருச்சி இந்த ராசா தம்பி...!!
காலனுகிட்ட சீக்கிரம் கயிறு கொண்டுவரச் சொல்லணும்..!! நாட்ட பாத்துக்கங்க தம்பியளா...!!

எழுதியவர் : சரவணா (15-May-14, 7:19 am)
பார்வை : 177

சிறந்த கட்டுரைகள்

மேலே