சிறப்புக் கவிதை 34 - விமர்சனம் கவிதைகள் உதிரும் மனிதம் - ரத்ன மூர்த்தி

ரத்ன மூர்த்தி .. இந்த மூர்த்தியிடம் கீர்த்தி நிறைய இருக்கிறது.... கூடவே நேர்த்தியும்...! ஒரு சிறு பறவையின் சிறகு உதிர்தலை இவ்வளவு அழகாக ஒரு சிறந்த பாடு பொருளுடன் கவிஞர் வடித்திருக்கிறார் என்பது ஆனந்தம்.. ஆச்சரியமில்லை... இவர் ஏற்கனவே ஆச்சர்யங்கள் விழுங்கி ஆனந்த எல்லைக்குள் கொடி நட்டுவிட்டார்..

நிகழ்வுகளாகப் பார்த்தால் இக்கவிதை அழகு. இந்த நிகழ்வுகளை நம்மைச் சுற்றி கடந்துபோகும் நிஜங்களோடு பொருத்திப் பார்த்தால் அதிசயம். ஒரு சிறுகுருவிக்கூடு இன்றைய வாழ்க்கை சேதாரங்களை தன சிறகு உதிர்த்தலின் மூலமாக புரிய வைத்திருக்கிறது என்பதில் இருக்கிறது மூர்த்தியின் கீர்த்தி.

"தனது கூட்டைத் துறக்கும்
பறவையானது
சுயநலச் சிறகுகளை
உதிர்த்துவிட்டுப் பறக்கிறது
கூட்டிற்குத் துணையாக "

யாருமற்ற ஒருதொகுப்பு வீட்டில் இரண்டு முதியவர்களோ அல்லது ஒரு சிறுகுழந்தையோ கையில் தானியக்கியோடு தொலைகாட்சி முன்னமர்ந்து தாம் பன்னாட்டுக்கு விற்ற குடும்ப உறுப்பினர்களின் அழைப்பு மணி ஒலியை எதிர்பார்த்திருக்கும் அவர்களுக்கானது இக்கவிதை..

"கூடுகளோ
பறவைகளுக்காகக்
காத்திருக்கின்றன

பறவைகளோ
சிறகு உதிர்ப்பதில்
மிகக் கவனமாய் இருக்கின்றன "

சிறகுகளை விட பறவைகளும் சுயநலங்களை குத்தகைக்கு அள்ளிக்கொள்கிறது சிலசமயங்களில். குத்தகைதாரர்களும் குற்றவாளிகளும் மாறி மாறி உதிர்த்ததிலும் உதிர்ந்தலிலும் யாருமற்ற அனாதையாகி வெறும் அடையாளங்கள் மட்டும் சுமந்து நிற்கிறது கூடு... அல்லது வீடு.. என்று அழகாக எழுதியிருக்கிறார்.. இவ்வாறு
"இப்போதைக்கு
எல்லாக் கூடுகளும்
இப்படித்தான் இருக்கின்றன
என்பது
காலக்கிளையின் வருத்தம் "

வீடுகளுக்குள் பணம் பெருக்கி பொருள் அடைப்பதைவிட அன்பு பெருக்கி அன்னோனியம் நிரப்புங்கள்.. அது சமூகத்தில் மனிதம் வளர்க்கும் என்று சொல்ல வருவதாகவே எனக்குப் படுகிறது...
சிறகு உதிர்தல்..! கனிந்த பழம்...!!!

எழுதியவர் : சரவணா (15-May-14, 7:58 am)
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே