அவளுக்காய் என் கண்கள் தூங்க மறுக்கின்றன
பலர் உறங்கும் வேளை!
நான் உறங்கவில்லை!
பரீட்சைக்குப் படிக்கவா?
பாடம் சொல்லித்தரவா?
இல்லை
என் விழிகள்!
கனவிலும் உனைக்கான
மறுப்பதால்!
எனக்கு நீ என்றாய்!
உனக்கு நான் என்றேன்!
மடல் நிறைந்த வார்த்தைகள்!
மதி மயங்கினோம்!
கனவிலே சஞ்சரித்தோம்!
கவலைகள் பல மறந்தோம்!
தெய்வீக நட்பெனக் கொண்டேன்!
ஏமாந்தேன்!
உன் புத்தி
பின் புத்தி
உணர்ந்து கொண்டேன்!
அன்புக்கு பகரமாய்!
பல தந்தேன்!
முத்தமும் கூட
முகம் சிவந்தாய்!
இதழ் கூட்டி
நீயும் தந்தாய்!
பைத்தியமானேன்!
தற்காலிகம் என
உணராதவனாய்!
தொடர்பாடல் பல செய்தோம்!
மடலாய்!
தொலை பேசியாய்!
தோழியூடாய்!
கண்களால்
காதல் ஆய்வு செய்தோம்!
பின்னிலை அறியாமல்!
உன் நிலை புரியாமல்!
அன்று நீ சொர்க்கமானாய்!
தெகிட்டாத தேனானாய்!
திரவியம் பல வென்றாய்!
ஆனால்
இன்றோ
துரோகியானாய்!
பணப் பேயானாய்!
சந்தர்ப்ப வாதியானாய்!
ஆம்
கரம் பிடிக்க நான் இருக்க!
காதல் செய்து காத்திருக்க!
பணத்தையே காதல் கொண்டு!
நில புலம்
பணம் அந்தஸ்த்து
அடிமையானாய்!
காதலது கத்தரிக்காய் என்றொதுக்கி!
பறந்தே போனாய்!
மேற்குலகம்!
ஆதலால்
தீண்டத்தகாத உன்னை!
வன்மை உளம் படைத்த உன்னை!
மென்மையான இவன்!
கனவிலும் வந்திடாதே என்று!
என் கண்கள் !
தூங்க மறுக்கின்றன!
ஜவ்ஹர்