தரணி கண்ட தாய்யவள்

கருவில் சுமந்தவளை
காக்காவிட்டாலும்
கதிகலங்க வைத்து விடாதே ...

அன்னை அவளை
அரவணைக்கவிட்டாலும்
அவல நிலைக்கு தள்ளிடாதே ....

அறியாமை கொண்டவளிடம்
அன்பு காட்டாவிட்டாலும்
அலட்சியப்படுத்தி விடாதே .....

பாசம் காட்டியவளிடம்
பரிதாபம் கொடாவிட்டாலும்
பரிதவிக்கவிட்டு விடாதே ....

உன்னதமானவளை
உற்சாகப்படுத்தாவிட்டாலும்
உதாசினப்படுத்தி விடாதே ....

ஓடாய் உழைத்தவளை
ஒய்யாரமாய் வாழ வைக்காவிட்டாலும்
ஓலமிட வைத்து விடாதே ....

சேயானவள் அவளுக்கு
சேவை செய்யாவிட்டாலும்
செலவென்று எண்ணிவிடாதே ....

தூயவள் அவளை
தூபமிட்டு துதிக்காவிட்டாலும்
தூசி துரும்பாய் துடைத்து விடாதே ....

பேதை அவளை
போற்றாவிட்டாலும்
போக்கிடம் தெரியாமல் மாற்றிவிடாதே ....

முதிர்ந்தவள் அவளை
மாசில்லா மாணிக்கமாய் கருதாவிட்டாலும்
முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதே......!!!!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (16-May-14, 2:40 am)
பார்வை : 158

மேலே