அம்மா
அம்மா!
அம்மா! இன்று நீ இல்லை! ஆனால், என்னுள் நிறைந்திருக்கிறாய்.... அம்மா.! என் வாழ்வில் இந்த சொல்லை இலட்சம் முறை உச்சரித்திருப்பேன்.. வெவ்வேறு உணர்வுகளில், பல்வேறு ராகங்களில்...
இன்பம், துன்பம் எல்லா நிலைகளிலும் உன்னை அழைத்திருக்கிறேன்.. ஒவ்வொரு அழைப்பிலும் உன் ஜீவனின் நிழல் பதிந்திருக்கும்.. இறைவனுக்கு எப்படி இணையில்லையோ, உவமையில்லையோ அப்படியே உனக்கும்!! என் வலிக்கு, என் சோகத்திற்க்கு ,என் சோர்வுக்கு நீதானம்மா மருந்தாய் இருந்தாய்! நான் நிற்பதற்க்கும், நிலைப்பதற்க்கும் நீதானம்மா ஜெபித்தாய்! உன் உயிரிலிருந்து ஒற்றி எனக்கு உயிர் கொடுத்த மூல உயிர் நீதானம்மா..! அம்மா... இன்று நீ இல்லை, எல்லாம் எனக்கிருக்கிறது... ஆனாலும், இன்று தாயில்லா அனாதை நான்!! உனக்கென்று ஒருநாளை உலகமே கொண்டாடுகிறது உன் மகள் நானோ, உயிருள்ளவரை ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுவேன்...