நிலவின் எழிலில் மூழ்கித் தழுவினரே - நேரிசை ஆசிரியப்பா
வெள்ளிப் பௌர்ணமி வட்ட நிலவு
இருண்ட இரவினில் ஒளிதர, உன்னத
ஒளியைக் கண்ட காதலர் மயங்க,
வெள்ளிக் கலவைக் கொத்தாய் மேகம்
வானில் மெல்ல ஊர்ந்து செல்ல,
நிலவு வரும்நாள் என்றும் மகிழ்வே!
நிலவைப் பார்த்து தலைவி தன்னிலை
மறந்து ஓடும் நொடிகளில் தலைவன்
வரவை நோக்கிக் கைகூப் புகிறாள்!
இதயம் துடிக்க காதலர் இருவர்
தம்மை மறந்து நிலவின்
எழிலில் மூழ்கித் தழுவி னரே!