கந்தகக் காற்றிலே

கந்தகக் காற்றிலே... கந்தகக் காற்றிலே...
வெந்து மடிந்தோமே....!
சொந்த மண்ணிலே... சொந்த மண்ணிலே...!
செத்து விழுந்தோமே...!!

முள்ளிவாய்க்கால் மீது கிடத்தி,
கொள்ளி வைத்தான்... எதிரி!
கொத்துக் கொத்தாய்க் குண்டு போட்டு,
சாக வைத்தான்... சிதறி!!

பிஞ்சுக் குழந்தையெல்லாம் பிஞ்சு போனதடா....
நஞ்சுக் குண்டிலே எரிஞ்சு போனதடா..........!
நெஞ்சம் வெடிக்கிற சேதி தினமே....
பஞ்சமின்றித்தான் வந்து சேர்ந்ததடா........!!!

காப்பாற்ற முடியலையே...
கதறி அழுதோம் நாங்கள்...!
கேட்பாரற்று நீங்கள் சிதற...
பதறித் துடித்தோம் நாங்கள்...!

ஊமையான சர்வதேசம்...
செய்ததெல்லாம் சர்வநாசம்..!
போலியான மனிதநேயம்...
சொன்னதெல்லாம் வெற்று வேஷம்..!!

உரிமைகேட்டு.... உயிரைக் கொடுத்து,
எழுந்து நின்ற போராட்டம்!
உலக நாடு... உதவி கொடுத்து,
சூழ்ந்து செய்த சதியாட்டம்!

ஆயனற்ற ஆடுகளாய் நாம்...
வேறு வழிதேடி..... அலைகின்றோம்!
எம் நாடு வேண்டி.... விடுதலைப்போரை,
மாவீரர் கனவோடு.... தொடர்கின்றோம்!

முள்ளிவாய்க்கால்... மண்ணில் விழுந்தோம்,
விதைபோல்.... மீண்டும் எழுவோம் !
தளரும் நிலையில் தமிழன் இல்லை -இங்கு,
தலைகள் குனிய..... எவரும் இல்லை!!

தமிழின் தாகம் அடங்காது!
தமிழீழக் கனவென்றும் முடங்காது!!
தமிழன் உணர்வுக்கு தடையேது?!
புலியன்றி அவனுக்கு வேறு படையேது!?

விருட்சமாய் பெரு வெளிச்சமாய்
வளரும்.... ஒருநாள் விடியும்!
புலரும்.... ஒரு நாள் உலகப் படத்தில்,
தமிழ் ஈழ தேசம் தெரியும்!

நாம் சிந்திய குருதியில்...சிவந்த மண்மீது
சிரிக்கும் காந்தள்.... பூக்கள் பூக்கும் !
சுதந்திரக் காற்றில்.... எங்கள் மண்ணும்,
நிச்சயம் ஒருநாள்.... திளைக்கும்!

************************************************************

எழுதியவர் : ஒருவன் ~ கவிதை (16-May-14, 8:03 pm)
சேர்த்தது : ஒருவன்
பார்வை : 2251

மேலே