ஆறுமுகன் வாழ்த்து

கொஞ்சு தமிழ் குலவு கவிதை முகம் ஒன்று
சொல்லின் உரை நடவும் காவிய முகம் ஒன்று
மதிமயக்கும் பாட்டுரை தமிழ் கீத முகம் ஒன்று
திருக்கூத்தன் ஆடும் கூத்து தமிழ் முகம் ஒன்று
தெய்வதுதி செய்யும் மந்திர தமிழ் முகம் ஒன்று
பாமரன் வழக்கில்உரை பேச்சுதமிழ் முகம் ஒன்று
ஆறு முகமான அறுசுவை செந்தமிழ் வடிவோய்
தென் தமிழ் வேளோஇ தேன் தமிழ் அருள்வாய்

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (16-May-14, 11:24 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 95

மேலே