தமிழ் வாழ்த்து

சங்கம் மூன்ரும் வளர்த்த சந்தத் தமிழே
சிந்தையில் உறவாடும் சிங்காரத் தமிழே
சுவை ஆறும் கொண்ட சுந்தரத் தமிழே
செந்தில் நாதன் ஆளும் செந்தூரத் தமிழே
சைவமும் வைணவமும் தழைசெய் இசைத் தமிழே
சொக்கேசன் மனம் மகிழும் சொற்களஞ்சியமே
சோதனைகள் பல வரினும் சோர்ந்திடாது நீ வாழியவே

எழுதியவர் : ராஜகோபாலன் kumar (17-May-14, 1:42 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே