ஓர் இலங்கை அகதி

நாளைய பொழுது
விடிந்தால் அவசரமாக
அலுவலகம் ஓடவேண்டிய
அவதி எனக்கில்லை !!

ரேஷன்க்கடை க்யூவில்
அரிசிக்கும் மண்ணெண்னைக்குமாய்
நான் தவமிருக்க
தேவையில்லை!!!

எங்கள் கட்சிக்கு
ஓட்டுப்போடுங்கள்
என எந்த அரசியல்வாதியும்
என்னிடம் பிச்சைக் கேட்கப்
போவதில்லை !!!

என் மகளின் L.K.G
அட்மிஷன்க்காக பரம்பரை
சொத்துக்களை விற்கும்
பாவ நிலை
எனக்கில்லை !!!

ஒரு பக்கம் ஜாதி
மதபேதங்கள் மற்றொரு பக்கம்
காந்திஜி சிரித்த நோட்டுக்களுமாய்
அடுக்கபட்டிருக்கும் நீதி தேவதையின்
தராசுத்தட்டினை பார்க்கும்
பதவியும்
எனக்கில்லை !!!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்று கூறிய
பாரதியின் பெயரிட்ட
பல்கலைக்கழகத்தில் ஜாதி
என்னும் கட்டத்தை
நிரப்பும் வாய்ப்பு எனக்கு
வழங்கப்படவே இல்லை!!


இன்றைய தமிழர்களின்
இத்தகு நிலையை
அனுபவிக்காத நான்
ஈழனாய் பிறந்து
சில நடுநிஷி கூட்டத்தால்
நாடு கடத்தப்பட்டு
இங்கு வந்து சேர்ந்த
ஓர் இலங்கை அகதி !!!!

எழுதியவர் : அருணா (16-May-14, 7:08 pm)
Tanglish : or ilangai agathi
பார்வை : 105

மேலே