யார் நீ
யாரென்று தெரியாத காற்று
என்னை வந்து அறைந்தது
தென்றலாய் !!
யாரென்று தெரியாத நீர்
என்மேல் விழுந்தது
மழைத் துளியாய் !!
யாரென்று தெரியாத ஸ்பரிசம்
என்னை வந்து
சுட்டது நெருப்பாய் !!
யாரென்று தெரியாத ஈர்ப்பு
என்னுள் நுழைந்தது
ஈடுபாடாய் !!
யாரென்று தெரியாத நீ
எப்படி எனக்குள்
நுழைந்தாய் கவிதையாய்????