உன்னை போல் ஒருவன்

உன்னை போல் ஒருவன் !
பார்த்ததும் விழுந்ததால் பிழையாய் போகுமோ ?
பயந்த எனக்கு காலப்போக்கில் புலர்ந்தது ,
தவமாய் தவமிருந்தாலும் நிச்சயமாய் வாய்ப்பில்லை ,
உன்னை போல் ஒருவன் !!
கண்டதும் காதலா ?
கேளி செய்த மூளையும் ,
மூலையில் முகத்தை மூடி கொள்கிறது ,
மனதின் கொண்டாட்டத்தை அடக்க ,
குறை ஒன்றும் இல்லை ..
அவனிடம் ! அதனால் !
காரணிகள் வார்த்தை வடிவு எடுக்கவில்லை ,
ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை ,
இருந்தும் நம்பவைதேன் மூளையை ,
மெச்சி கொள்கிறது மனமும் ! அதனால் !
உண்மைகளுக்கு ஆதாரங்கள் அவசியமில்லை ,
உணர்வினுக்கு வார்த்தைகள் உதவுவதில்லை ,
உன்னிடம் என் காதல் அவ்விதமே !
தவமாய் தவமிருந்தாலும் நிச்சயமாய் வாய்ப்பில்லை ,
உன்னை போல் ஒருவனும் !!