காதல் கிறுக்கல் 1

எழில் சூழ்ந்த மலைச் சாரல்
ஏகாந்தம் எங்கும் பொங்க
ஆதவன் மேற்கில் மறைய
அந்தி வானம் மெல்ல இருள
மேகம் மழைத் தூறல் போட
தேகம் அதிலே சிலிர்த்து போக
என்னவன் என் நணியில் நிற்க
அன்னமாய் நான் கரங்கள் கோர்க்க
வார்தைக ளனைத்தும் மௌனமாய் போக
பார்வைகள் மட்டும் பல கதைகள் பேச
இதமாய் என் இடையைப் பற்றி
சுகமாய் தன் தோளில் சேர்க்க
நாணம் என் முகத்தில் பரவ மறு
கணம் அவன் அணைப்பில் உறைய
காணும் அனைத்தும் மெதுவாய் மங்க
நானும் எங்கோ விண்ணில் உலவ
தேறல் கொண்ட இதழில் இலயிக்க
சாரல் எந்தன் நெஞ்சில் அடிக்க
ஆசை கொண்ட மனதும் துடிக்க அவன்
மீசை எந்தன் நாணம் ஒழிக்க
அவன் விரல்கள் எந்தன் குழல்கள் வருட
காதின் ஓரம் இதழ்கள் பதிக்க
தேகம் முத்த மழையில் நனைய
தாகம் கொண்ட உடலும் தவிக்க
இடியின் முழக்கம் செவியில் தாக்க
மூடிய கண்கள் விரிந்து நோக்க
நாணச் சிரிப்பில் தலையைத் தட்டி
நானே சொன்னேன்
"அட.... கனவு!!!!!"