எங்கே சென்றாய் என்னை விட்டு
பசியென்று சொல்லிட
பக்கத்தில் நீ இல்லை. . .
பேணா மறந்த தேர்வறையில்
பேசாமல் முறைக்க
உன் விழி இல்லை. . .
பேருந்து பயனமெல்லாம்
வாயாடி வம்பிழுக்க
உன் கொஞ்சும் குரல் இல்லை. . .
அப்பாவின் அடி மறக்க அன்பே
உன் அருகாமை இன்றில்லை. . .
அம்மாவின் சந்தேக கேள்விகளுக்கு
சிநேகிதியே உன் ஆருதல் இல்லை. . .
தெரிந்தே இடித்துவிட்டு போகிரான்
அவனென திட்டித்தீர்க்க நீ இல்லை. . .
தவறாய் சமைத்திட நேரிட்டால்
சுவையென பொய் சொல்ல நீ இல்லை. . .
சுவையாய் சமைத்திட கற்றுத்தந்து
கேலி செய்து சிரித்திட ஏன் இல்லை. . .
நீங்காமல் கைக்கோர்த்து
நாளெல்லாம் சிரித்தலைந்தோம்
பைத்தியம் போல். .
உண்மையில். . .
பைத்தியங்கள் சிரிப்பதில்லை
புரிந்தது உனை பிரிந்த நாட்களில்...!!