ஈழத்துக் குரல்
குடும்பம் காக்க குழியில் பதுங்கினோம்!
கையில் உடமையுடனும் உறவுடனும்
திசை அறியா நடந்தோம்!
உடமை மறந்து உறவுடன் ஓடி!!
உறவையும் தொலைத்து கையில்
ஏம்முயிர் மட்டும் ஏந்தி !
ஓட வழியின்றி!
செல்ல திசையின்றி!
ஒதுங்க நிழலின்றி!
எம்முயிரே சுமையானதால்
அச்சுமை துறந்து
சற்று ஓய்வெடுக்க உறங்கினோம்
மரணப்படுக்கையில்!
அனால்
விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை!
விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
