அன்புள்ள online காதலிக்கு

அன்புள்ள online காதலிக்கு !
----------------------------------------------

ஓர் அழகிய
நிலாக்காலம்,
பைய நகர்ந்திடும்
கனாக்காலம்.

என் ஆசைகள்
பந்தி வைத்து ,பரிமாறக்
காத்துக்கிடக்கிறேன்
பத்தியமாய் ...

காலையில் கண்கள்
கண்ட ஒன்று காளையின்
கண்ணைவிட்டு அகழவில்லை,
காலண்டர் .. கண்மணி நாளை
உன் விடுமுறை !

எப்போது வந்தாலும்
சொற்பமே பேசுகிறாய்
ஆகையால் - இன்று
வரையறை தாண்டி
தொடரட்டும் இரவு ...
விதிமுறை கடந்து
வளரட்டும் நிலவு ..

ஓ பெண்ணே !
நுனி நாக்கில் எச்சில் சொட்ட
மணிக்கணக்கில் என் ஜீவன்
வளைகுடாவில் காத்திருப்பதை
வலைத்தளம் உன்னிடத்தில்
சொல்லவில்லையா ?

இல்லை ,
எப்போதும் வேகமாய் நகரும்
உன் கடிகார முட்கள் இன்று
லாவகமாய் சதி செய்ததுவோ ?

நொடிக்கொருமுறை
சொடுக்கிப் பார்ப்பதால்
மடிக்கணினி என் மீது
கொப்பளித்துத் தள்ளுகிறது ...

ஓ .....
தூர தேசத்துக்காரியே !
தூறல் சிங்காரியே !
உன் அணைப்பை தான்
பெறமுடியவில்லை
ஓர் அழைப்பையாவது எடு ..

முன் ஆயத்தங்கள் செய்து
முத்தாய்பாய் காத்துக்கிடக்கிறேன்
உன் மன ஆலயத்தின்
நடைதிறப்பிற்காய் ...

- நிஷான் சுந்தரராஜா -
19/05/2014

(வளைகுடாவில் வாழும் ஓர் இளைஞன் தன் தூர தேசத்து online காதலிக்கு எழுதும் மடல் .. என் கற்பனையில்)

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (19-May-14, 1:27 am)
பார்வை : 922

மேலே