சொல்லாமல் விட்டு செல்
சில நேரங்களில்...
சில மனிதர்கள்.
சிலர் புன்னகைப்பர்...
சிலர் முறைப்பார்...
சிலர் பரிகாசம் செய்வார்...
சிலர் பாசமழை பொழிவர்...
சிலர் நடிப்பார்...
சிலர் வஞ்சி புகழ்வார்...
சிலர் மௌனமாய் பிரிவர்...
நாம் என்ன செய்கிறோம்?
அன்பாய்...
பாசமாய்...
நேசமாய்...
நட்பாய்...
பேசி பழகி,
மக்களோடு மகிழ்ந்திருந்தால்...
ஏன் கோபம்?
ஏது வெறுப்பு?
எதற்கு சண்டை?
ஏனிந்த பிரிவு?
குற்றங்களை கண்டு,
சுட்டி காட்டும் முன்...
சிந்தித்து செயல்படு!
வாய்பேசி வென்றாலும்,
வழக்கென்னவோ நடுத்தெருவில்தான்!
பட்டம் பெற்றவன்,பண்புள்ளவன்...என்று
பரிந்துரைத்தாலும்...பலனில்லை!
விட்டு கொடுத்து...விலகிச் செல்!
வாய்ப்பேச்சு,
வருத்தத்தை வரவழைக்குமென்றால்...
சொல்லாமல்...விட்டுச்செல்!
சொந்தங்கள் பிழைத்து போகட்டும்!
சொல்லிவிட்ட வார்த்தைகள்,
உன்னை கொல்லும்...
சொல்லாத வார்த்தைகள்,
உன்னுள் வெல்லும்!
சொல்லாமல் ...விட்டுச் செல்!
ரோஜா மீரான்..