என் தலைவா

கட்சி விட்டு
கட்சி மாறி
கால்நடயா ..
போற தலைவா ?

விரைந்து நீரும்
செல்வதற்கு ...
மாற்றுவழி
ஏது இப்ப !

மாறி ..மாறி
செல்கிறோமே...
நாம இப்ப
எந்த கட்சி ?

குழப்பங்கள்
வருகுதய்யா
குடிமகன் நான்
என்ன செய்ய ?

நுனி நாக்கில்
தமிழ் பேசி
கட்சிகளை
நாம் வளர்த்தோம் ...

தலைவா
உம் புள்ளைய மட்டும்
கான்வென்டில் ஏன்
படிக்க வச்சம் ?

உன் பேச்சுக்களால்
கவரப்பட்டு
உசுரக்குடுத்து
நான் ஒழச்சேன்...

கொண்ட கட்சி
கொள்கைக்காக
குடும்பத்தையும்
நான் மறந்தேன் ?

போஸ்டர் ஒட்டி
கொடி புடிச்சி
மால போட்டு
ஒன்ன அழகுபார்த்தேன் ...

என் தலைவன்போல
யாருன்னு
சொல்லி சொல்லி
மாஞ்சுப்புட்டேன் !

மதங்களின் பெயரால்
கட்சி பல
இருக்குதய்யா?

சாதிக்கொரு
கட்சியென்ற
சங்கடங்கள் நிகழுதய்யா?

வேடிக்க பார்த்துப்புட்டு
விதிய நொந்து
இருந்துபுட்டேன் ..

அரசியல விட்டுப்புட்டு
ஓரமா நானும்
ஒதுங்கிப்புட்டேன்...

என் வாழ்க்கைய
தொலைச்சிப்புட்டு
"வாடாம "
நான் இருந்தேன் ..

நீ ஏதும் செய்வேன்னு
நம்பித்தானே
நான் வந்தேன் ?

தொண்டனையே
மறந்துபோன
துயரற்ற
என் தலைவா ...

நாடு இப்ப
என்ன செய்யும்
ஒன்ன நம்பினா
பல உசுரு சாயும் ..

என் நெஞ்சம் இப்போ
வெடிச்சிபோச்சு
உடலும் ரொம்ப
எளச்சு போச்சு ?

'கட்சி கட்சி' னு
சொல்லிக்கிட்டே
காலங்கள கடத்திப்புட்டேன்

"கட்சி கொள்க"
பறந்தப்போ ..
என் நெல கண்டு
விழிச்சுபுட்டேன்?

முழுநேர தொண்டனா
முட்டாளா இருந்திருந்தேன்

முதுகொடிஞ்ச பின்னால
முழுவதுமா தெளிஞ்சுபுட்டேன் ..

என் பொழப்ப
நானும் பாக்கவேணும் ..

என் புள்ளைகளும்
இப்ப படிக்கவேணும்

என்னுள் உணர்வு
இப்ப பிறக்குதய்யா?

ஆனால்
என் உடல்
என்ன செய்யுமய்யா ?

கட்சி விட்டு
கட்சி மாறி
'காசு பார்க்க '
போற தலைவா ?

கொண்ட கொள்க
இப்ப என்ன ஆச்சு ..

நம்ம மானம்
சுக்கு நூறா
ஒடஞ்சு போச்சு ?

தன்மானம் பெரிதென
நானும் இப்ப
விலகிப்புட்டேன் !

உன்மானம்
பெரிதென
எப்போ நீ உணர்வே
என் தலைவா ?

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (19-May-14, 3:19 pm)
Tanglish : en thalaiva
பார்வை : 167

மேலே