விழிகளில் கண்ணீர்மல்க கேட்கிறேன் உன்னிடம் 555

பெண்ணே...

என் மனதில்
உன்னை நினைத்து...

மனதில் காதல் கோட்டை
எனும் தாஜ்மஹால் கட்டினேன்...

காலை முதல்
மாலைவரை...

உன்னை நினைத்து
உன்னையே தொடர்ந்து...

நான் கட்டும் தாஜ்மஹாலில்
கல்வெட்டாய் கிறுக்குகிறேன்...

காதலர்களின் உள்ளங்களை
கொள்ளை கொள்ளும்...

வெள்ளை தாஜ்மஹால்
கூட தோற்கும்...

நான் உனக்காக என்
மனதில் எழுப்பும்
காதல் கோட்டை...

மண்ணில் வாழாத காதல்
தான் வாழ்கிறது...

பலரின் மனதில்...

என்னை நீ
வெறுத்த போதும்...

தொலைவில் இருந்து
என் கோட்டையின்...

கல்வெட்டுகளை ஒவ்வொன்றாய்
பிரித்து எடுக்கிறாயடி...

பெண்ணே நான் மண்ணில்
வாழ நினைத்தாலும்...

என் உயிரை
பறிக்கும் வரை...

நீ உறங்கமாட்டாயோ...!

உடலை விட்டுவிட்டு
உயிரை பறித்துவிட்டாய்...

என்னை நீ
பிரிந்த போதே...

விழிகளில் கண்ணீர்மல்க
கேட்கிறேனடி...

இன்னும் என்னில்
என்ன இருக்கிறது...

நீ பறிக்க...

விழிகளில் கண்ணீர்மல்க
கேட்கிறேனடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-May-14, 9:53 pm)
பார்வை : 266

மேலே