குழந்தை பிறந்தவுடன் அழுகிறது ஏன்

தாயே! உன்னுள் இருக்கும் வரை
உயரிய அரவணைப்பு ...
மீண்டும் இந்த அரவணைப்பு
கிட்டுமா என்பதே
இந்த அழுகுரல்...!

நான் ஏன் பிறந்தேன்?
நிலைகெட்ட மாந்தருடன்
நேசம் வைக்கவா ..?
நெஞ்சினில் வேதனையெனும்
பாரத்தை சுமக்கவா ..!
பாரத்தோடு என் பாரத்தையும்
சேர்த்து சுமந்த தாயே...!
நீ அடைந்த இன்னலில்
பங்கு கொள்ளவே பரிதவித்து அழுகிறேன்..!!!!!
நீ நினைவிழந்த வேளையிலாவது
நிம்மதியுடன் தூங்கு ..!
நான் வந்துவிட்டேன்
உன்னோடு பங்குகொள்ள
தூங்கு தாயே ..!நீ தூங்கு...!

(இது குழந்தை தாய்க்கு பாடும் தாலாட்டு )

எழுதியவர் : நாகரத்தினம் (21-May-14, 12:18 am)
பார்வை : 272

மேலே