எழுமின், விழிமின்
நித்திரையே நித்தம் நித்தம் திரையாக
நிம்மதியாய் நாமும் அதை தினம் போர்த்த
நித்தியமில்லா நிரந்தரமில்லா வாழ்விதனை
நீண்டு கழிக்காமல் நிமிர்ந்து நடை போடு...
எத்துணையும் வருவதில்லை நித்திரையில்-
தனித் தனியே வந்து போவது தெரிந்திருந்தும்
தள்ளி நிற்காமல் ஒட்டி உறவாடுவதும் ஏனோ?
முட்டாள் மனதிற்கு முள் கிரீடம் சரிதான்...