காதல் தோல்வி

ஒரு கோடீஸ்வரரின் மகள் .காதலிக்கிறாள் ஒரு ஏழைப் பையனை .பையனோ அவளைப் போல படித்தவன் தான் .
திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் ஏற்க்க வில்லை . காதலின் மயக்கத்தில் இருவரும் பெற்றோர்களின் சம்மதமின்றியே கல்யாணம் செய்து கொண்டு வாழ முயற்சிக்கின்றனர் .
தனி குடித்தனம் . வாழ்க்கை ஒரே போராட்டம் !
காதல் மயக்கம் தெளிந்தது , வாழ்கைப் போர் எழுந்தது
வேலை கிடைக்கவில்லை .சாப்பிடவும் பொருளில்லை .குடியிருக்க வழியில்லை
தளர்ந்து , களைத்து பெற்றோரை நாடும் போது
காதலன் கை விட்டுவிடுகிறான் .
பெற்றோர்கள் கை கொடுக்கிறார்கள் ; ஆனால்
அவள் கரம் பிடிக்க வரம் வேண்டுகிறாள் அந்த அபலைப் பெண் !

எழுதியவர் : தனராஜ் (21-May-14, 9:22 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 98

மேலே