சாக்லேட்

துள்ளுவதும் துவளுவதும்
அள்ளிக் குடிக்க வேணும் அமுதாக...
துடிப்பிருக்கும் நாள் வரைக்கும்
வைரமாய் ஜொலிக்க வேணும் அரசாள...

நட்பிருக்கும் பகைஇருக்கும்
நாசுக்காய் நடக்க வேணும் தெம்பாக...
சிந்திக்கும் நொடி வரைக்கும்
சிங்காரமாய் சிரிக்க வேணும் பரிமாற...

சூதிருக்கும் சூத்திரமிருக்கும்
அகக்கண்ணில் காண வேணும் விரைவாக...
அசைகின்ற நாள் வரைக்கும்
அலங்காரமாய் அசைபோட வேணும் அழகாக...

அன்பிருக்கும் ஆணவம் இருக்கும்
ஆத்தாளை கும்பிட வேணும் இயல்பாக...
இல்லாது போகும் வரைக்கும்
இரக்கமாய் இருக்க வேணும் அறிவோடு...

எழுதியவர் : ஆதி (21-May-14, 9:53 pm)
Tanglish : saklet
பார்வை : 86

மேலே