கிரகங்களும் நானும்

திங்கள் சென்று
திரவியம் தேட ஆசை ...
செவ்வாய் சென்று
செவ்விளநீர் பருகி வர ஆசை ...
புதன் சென்று
புதையல் தோண்டி வர ஆசை...
வியாழன் சென்று
விறகு வெட்டி வர ஆசை...
வெள்ளி சென்று
விற்பனை பதாகை வைத்து வர ஆசை...
சனி சென்று
சமையல் செய்து வர ஆசை....
ஞாயிறு சென்று
ஞானம் பெற்று வர ஆசை...
சூரியன் சென்று
சூரியகாந்தி பூ நட்டு வர ஆசை...
நிலவு சென்று
நீர் பிடித்து வர ஆசை...
பால்வீதி எங்கும்
பவனி வர ஆசை...
அண்டம் முழுதும்
ஆடி ஓட ஆசை ....
எலியும் ஏரோப்ளேன்
ஓட்டும் காலத்தில்
எனது ஆசைகள்
பலிப்பதும் திண்ணமே .............!!!!!!!!!!!!