என்னோடு நடை போடா நீ வேண்டும் 555
என்னவளே...
உன்னைத்தேடி
ஓடிவந்தேன்...
உன்னருகில் அமர்ந்து
நான் உரையாட...
முதல் முறை...
என் கரம் பற்றி என்னை
அழைத்து சென்றாய்...
என்னை நீ அழைத்து
செல்லும் இடம்...
வந்து விட கூடாதென்று
எண்ணுகிறேன்...
என் கரம் பற்றி
நீ நடை போட...
நான் காத்திருந்தேனடி
நாட்கள் பல...
நான் உன்னை அழைத்து
செல்லும் போதெல்லாம்...
என் கரங்களை
இருக்க பிடித்து...
என் தோலில் சாய்ந்து
கொண்டே நடை போடுவாயடி...
உன் தோளினை பற்றி
கொண்டு வர...
எனக்கும் ஆசை
கண்ணே...
என் கரம் பற்றி நீ
அழைத்து செல்ல வேண்டும்...
மைல்கல் பல...
என் வெண்புறாவே...
இன்னும் சிறிது தூரம்
என்னை அழைத்து செல்லடி...
உன்னை நான்
ரசிக்க வேண்டும்...
இன்னும் இன்னும்.....