விளம்பரம்

வியாபாரம் சிறக்க
விளம்பரம் பெரிதாய்
விரும்பாப் பொருளும்
விரும்பச் செய்யும்
வித்தை இதுவாம்
இடக்கரடக்கல்
மறைபொருள் குறிக்க
இதனில் மட்டும்
கலையது கட்டும்
மறைபொருள் இன்றி
வெளிப்படையாகும்!
பெண்மை கூட
விளம்பரமாகும்
பலபேர் பார்க்க
அலங்காரமாகும்
அழகுப் பதுமை
அவளின் அழகை
பலபேர் ரசிக்க
கூனியே போவாள்!
பெண்ணின் ரகசியம்
விளம்பரமாகும்
உள்ளாடை அதுவும்
வௌிப்படையாகும்
அணிந்த பெண்டிர்
பலபேர் பார்க்கும்
காட்சிப் பொருளாய்
அதுவும் ஆகும்!
படுக்கை விரிப்பு
விளம்பரமாக
படுக்கைக் காட்சி
அம்பலமாகும்
அதுவே பலரின்
மனதில் நின்று
மானம் போகும்
காட்சியாகும்!.
சொல்லக் கூசும்
வார்த்தை பெரிதாய்
வாய்விட்டுக் கூறும்
விளம்பரம் பெரிதாய்
கூசும் வார்த்தை
அழகு பொருளாய்
மாற்றம் கண்டது
விளம்பரத்தாலே!
விளம்பரம் நம்மை
விழுந்திடச் செய்யின்
வெறுத்திடல் வேண்டும்
மனதில் கொண்டு!!!!
ஜவ்ஹர்